×

கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் இன்சூரன்ஸ் முழுமையாக வழங்க வேண்டும்தமாகா வலியுறுத்தல்

திருச்சி, அக்.24: டெல்டா மாவட்டங்களில் கஜாபுயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் இன்சூரன்ஸ் முழுமையாக வழங்க வேண்டும் என தமாகா விவசாயிகள் அணியினர் வலியுறுத்தி உள்ளனர். காவிரிடெல்டாவில் வீசிய கடும் கஜாபுயல் காரணமாக பாதிக்கப்பட்ட நெல் உற்பத்தி விவசாயிகள் சுமார் 1லட்சம்பேருக்கு பயிர் இன்சூரன்சு இதுவரை தொகை சரிவர முறையாக வழங்கபடவில்லை. வழங்கப்பட்ட தொகையும் மிக குறைவாக உள்ளது. குறிப்பாக திருவாரூர், நாகை, தஞ்சை மாவட்டங்களில் இன்சூரன்ஸ் வழங்க தொடர்ந்து விவசாயிகள் போராடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட நெற் பயிருக்கு 8 சதவீதம் அளவிற்கு இன்சூரன்ஸ் கணக்கிட்டு உள்ளது. இது மிக குறைவானது ஆகும்.

100 சதவீதம் பாதிக்கப்பட்ட நெல் பயிருக்கு 8 சதவீதம் பாதிப்புதான் என கணக்கீடு செய்வது நியாயம் கிடையாது. மேலும் அந்ததொகையை வங்கிகள் விவசாயிகள் ஏற்கனவே வாங்கிய கடனுக்காக வரவு வைத்துபிடித்தம் செய்கின்றனர். எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் இன்சூரன்ஸ் முழுமையாக கிடைக்க தமிழக முதல்வர், தமிழக அரசின் வேளாண் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமாகா விவசாய அணி தலைவர் புலியூர் நாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருக்கிறார்.

Tags : storm ,Gaja ,
× RELATED திருப்போரூர்-நெம்மேலி சாலையில்...