×

தா.பேட்டை அருகே காருகுடி கிராமத்தில் சிறப்பு மருத்துவ முகாம்

தா.பேட்டை, அக்.24: தா.பேட்டை அருகே காருகுடி கிராமத்தில் அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்தின் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு வட்டார மருத்துவ அலுவலர் குமரேசன் தலைமை வகித்தார். மருத்துவர்கள் கவுதமி, தரணி, பல் மருத்துவர் கோபிநாத், சித்த மருத்துவர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவ அலுவலர்கள் அரசின் திட்டங்கள் குறித்தும், மருத்துவத் துறை மூலம் மக்களுக்கு செயல்படுத்தும் சிகிச்சை முறைகள் பற்றியும் விரிவாகப் பேசினர். தொடர்ந்து 50 கர்ப்பிணிகளுக்கு மூலிகை அடங்கிய சஞ்சீவி பெட்டகமும், தொழுநோயாளிகளுக்கு காலணிகளும் வழங்கப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு எலும்பு மூட்டு மருத்துவம், கண் சிகிச்சை, பொதுமருத்துவம், ரத்த பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்பட்டது. முகாமில் காருகுடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர். சுகாதார ஆய்வாளர் நிவாஸ், சதீஷ், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags : camp ,Karakudi village ,Thapet ,
× RELATED திமுக உறுப்பினர் சேர்ப்பு முகாம்