×

தனியார் ரயில்கள் திட்டத்திற்காக நிதி அயோக் அதிகாரக்குழு அமைக்கும் உத்தரவுக்கு கண்டனம் டிஆர்இயூ போராட்டம்

திருச்சி, அக்.24: திருச்சியில் தனியார் ரயில்கள் திட்டத்திற்காக நிதி அயோக் அதிகாரக் குழு அமைக்க வெளியிட்ட உத்தரவை எதிர்த்து டிஆர்இயூ சார்பில் கண்டன போராட்டம் நடந்தது. தெற்கு ரயில்வே முழுவதும் தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் சார்பில் தனியார் ரயில்கள் திட்டத்திற்காக நிதி அயோக் அதிகாரக் குழு அமைக்க வெளியிட்ட உத்தரவு நகல் எரிக்கும் போராட்டம் நேற்று காலையில் நடத்தியது. அதன்படி நேற்று மாலை திருச்சி கோட்ட அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்திற்கு கோட்ட செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார். துணைப் பொதுச் செயலாளர் மனோகரன் சிறப்புரையாற்றினார். ரயில்வே அமைச்சகம் 50 முக்கிய வழித்தடங்களில் 150 ரயில்களை தேர்வு செய்து தனியார்கள் வசம் ஒப்படைத்து ரூ.20 ஆயிரம் கோடி நிதி திரட்ட திட்டமிட்டு இருக்கிறது. ரயில்கள் விற்பனையில் ஏலப் போட்டியை பொருத்து இந்த தொகையில் ஏற்ற இறக்கம்அமையும். தனியார் ரயில்களுக்கான தண்டவாள பயண்பாட்டு கட்டணம், பயணிகள் கட்டண நிர்ணயிக்க அனுமதி, வகுப்பு வாரியாக ஒவ்வொரு ரயிலுக்கும் தேவையான பெட்டிகள், இன்ஜின்கள் மற்றும் ஒட்டுனர்கள் பயண்படுத்த கட்டணம் போன்ற விவரங்கள் தயாரித்து ஏலத்திற்கான புள்ளிகள் மற்றும் நிபந்தனைகள் வரையறுக்க உயர்மட்ட செயலாளர்கள் அந்தஸ்த்து குழு அமைக்க இருக்கிறது.

இந்த அதிகாரமிக்க குழுவை அமைக்க நிதி அயோக் ரயில்வே அமைச்சகத்தை கேட்டுக்கொண்டது. குழு அமைக்கப்பட்டுவதில் வெளிப்படை தன்மை இல்லை. ரயில்வே பொதுத்துறை நிருவனமான ஐ.ஆர்.சி.டி.சி இயக்கும் முதல் தனியார் ரயிலில் கட்டணம் அதிகம், பயணச்சலுகைகள் இல்லை, குழந்தைகளுக்கான அரைக்கட்டணம் கிடையாது போன்ற குற்றச்சாட்டுகள் நிலவி வருகிறது. முற்றிலும் தனியார்கள் இயக்கும் ரயில்களில் நிலைமைஇதைவிட மோசமாகவே அமையக் கூடும். பயணச் சீட்டு பரிசோதகர்கள், குளிர்சாதன மெக்கானிக் ஊழியர்கள், ரயில்களுக்கான கார்டுகள் தனியார் ரயில்களுக்கு கிடையாது. பயணச் சீட்டுகள் விற்பனை முற்றிலும் ஆன்லைன் என்பதால் முன்பதிவு கவுண்டர்கள் பல மூடும் நிலை உருவாகும். 150 ரயில்கள் தனியார் இயக்கினால் இந்திய ரயில்வேத் துறையில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஊழியர்கள் வேலை இழப்பார்கள். பயணிகள் பிரிவு தற்போதைய 43 சதவீத இழப்பு 60 முதல் 65 சதவீதம் வரை உயரும். ரயில்வே படிப்படியாக நஷ்டமடைய துவங்கும் என தெரிவித்தார்.
இதில் உதவி பொதுச் செயலாளர் மாதவன், கோட்ட உதவித்தலைவர் சுவாமிநாதயாதவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : protests ,DREU ,IOC ,
× RELATED அமெரிக்காவில் அதிகரிக்கும் பாலஸ்தீன...