×

திருவெள்ளறை கோயில் ஊஞ்சல் உற்சவம் தாமதம் பக்தர்கள் காத்திருப்பு

மண்ணச்சநல்லூர், அக்.24: மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளறை பெருமாள் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் நேற்று நடைபெற்றது. முறைகாரருக்கு உரிய மரியாதை செய்யவில்லை என்ற வாக்குவாதத்தால் அரை மணி நேரம் தாமதமாக சாமி புறப்பாடு நடைபெற்றது. திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோயில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலின் உப கோயிலாகும் இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு உற்சவம் கடந்த 1ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. வழக்கம் போல் நேற்று கோயிலில் புண்டரீகாட்ச பெருமாள் மற்றும் பங்கஜவல்லி தாயாருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பெருமாள் மற்றும் தாயார் புறப்பாடு நடைபெற தொடங்கியது. இந்நிலையில் நேற்றைய உற்சவத்தின் முறைகாரர் ஆன ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் தனக்கு உரிய மரியாதை தரவில்லை என்றும், மேலும் சாமிக்கு படைக்கப்பட்ட பொங்கல் மற்றும் வடை தரவில்லை என்றும், மடப்பள்ளியில் வேலை பார்க்கும் செந்தாமரைக்கண்ணன் என்பவரிடம் கேட்டபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கிருந்த பட்டாச்சாரியார்கள் முறைக்காரரை சமாதானம் செய்தனர். பின்னர் தொடர்ந்து பெருமாள் மற்றும் தாயார் கோயிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இது குறித்து கோயிலில் வேலை பார்க்கும் ஒருவர் நம்மிடம் கூறும்போது, சாமி புறப்பாடு அரை மணி நேரம் தாமதமானது மிகுந்த வேதனையை தருகின்றது என்றும், மடப்பள்ளியில் வேலை பார்க்கும் செந்தாமரைக்கண்ணன் தொடர்ந்து இதுபோன்று கோயிலுக்கு வருபவர்களிடம் தவறான முறையில் பேசிக்கொண்டிருக்கிறார். இதுபற்றி அதிகாரிகளிடமும் ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகத்திடமும் சொல்லியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறினார்.

Tags : Devotees ,swing festival ,Thiruvallari Temple Temple ,
× RELATED கடும் விதிமுறைகளால் ஆர்வம் காட்டாத...