×

மாநகராட்சியின் எச்சரிக்கையை மீறி குடியிருப்பு பகுதியில் கொட்டப்படும் கழிவுகள்

திருப்பூர், அக். 24:   திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்தும், தொடர்ந்து குடியிருப்பு பகுதிகளில் கழிவுகளை கொட்டும் விதிமீறல் தொடர்கிறது.திருப்பூர் மாநகராட்சி ரோடுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் கோழி இறைச்சி கழிவு, சாக்கடை கழிவு, பனியன் சார்ந்த தொழில் கழிவு, கட்டிட கழிவு கொட்டுவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. கழிவுகளை கொட்டுபவர்களை கண்டறிந்து மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.  இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது: குடியிருப்பு பகுதி மற்றும் ரோட்டோரங்களில் கழிவுகளை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்தது. இதை மீறி அணைப்பாளையம், வெள்ளியங்காடு நால்ரோடு, பெரியார் காலனி, காந்தி நகர், காங்கயம் ரோடு, மங்கலம் ரோடு உட்பட பல இடங்களில் விதிமுறைகளை மீறி கழிவுகள் கொட்டப்படுகிறது. மேலும், திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம், சுகாதாரத்துறை உயரதிகாரிகள் இணைந்து திருப்பூர் நகரப்பகுதியில் சுகாதாரக்கேடு விளைவிக்கும் வகையில் செயல்படுபவர்களை கண்டறிந்து சட்டப்படியான நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும் என்றனர்.

Tags : areas ,corporation ,
× RELATED நிலத்தடி நீர் பாதிக்கும் வகையில்...