×

குஜராத்தில் 800 மெகாவாட் சூப்பர் கிரிட்டிகல் அனல்மின் நிலையம் பெல் இயக்கி

வைத்ததுதிருச்சி, அக்.24: பெல் குழுமம் குஜராத்தில் வனக்போரி அனல்மின் திட்டம், நிலை 8 விரிவாக்க திட்டத்தில் 800 மெகாவாட் அலகை வெற்றிகரமாக இயக்கியுள்ளது. குஜராத்தின் கேடா மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தத் திட்டம் குஜராத் அரசுக்கு சொந்தமான குஜராத் மாநில மின்னுற்பத்தி கழகத்திற்கு சொந்தமானது. இந்த 800 மெகாவாட் தொகுப்பு ஜி.எஸ்.இ.சி.எல்லின் மிக உயர்ந்த திறன்கொண்ட தொகுப்பு. முன்னதாக, பெல் 210 மெகாவாட் திறன் கொண்ட ஏழு அலகுகளை வனக்போரியில் அமைத்துள்ளது. அவற்றில் மிகப் பழமையானது 35 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது.

பொறியியல், கொள்முதல், கட்டுமானம் அடிப்படையில் நிலக்கரி அடிப்படையிலான 800 மெகாவாட் மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கான உத்தரவை பெல் நிறைவேற்றியுள்ளது. இதில் நீராவி விசையாழி மின்னாக்கி, கொதிகலன், தொடர்புடைய துணை மற்றும் மின்சாதனங்கள், அதிநவீன கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்புக் கருவிகள் மற்றும் நிலை மின் விரைவூக்கிகள் மற்றும் தொகுப்பின் பிற உபகரணங்கள்ளின் வடிவமைப்பு, பொறியியல், உற்பத்தி, வழங்கல், நிர்மாணித்து இயக்கி வைத்தல் ஆகிய பணிகளை பெல் மேற்கொண்டது. குஜராத்தின் மின் துறை வளர்ச்சியில் பெல் முக்கிய பங்காளியாக இருந்து வருகிறது.

பிஎஸ்இஎல் வழங்கிய அலகுகள் ஜிஎஸ்இசிஎல்-ன் நிறுவப்பட்ட திறனுக்கு 86 சதவீதத்துக்கும் அதிகமாக பங்களிக்கிறது. உலகளவில் 1,85,000 மெகாவாட்டிற்கும் அதிகமான மின் உற்பத்தி நிலையங்களின் நிறுவப்பட்ட தளத்துடன் இந்தியாவின் மிகப்பெரிய மின் உற்பத்தி சாதன உற்பத்தியாளராக பெல் விளங்குகிறது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் பல்வேறு வாடிக்கையாளர்களால் ஆணையிடப்பட்ட 58 செட் சூப்பர் கிரிட்டிகல் கொதிகலன்கள் மற்றும் 53 செட் சூப்பர் கிரிட்டிகல் விசையாழி மின்னாக்கிகளை பெல் ஒப்பந்தம் செய்துள்ளது.

Tags : Bell Drive ,Gujarat ,
× RELATED பாஜவுக்கு வாக்களிக்க மக்களுக்கு...