×

வேலை நிறுத்த போராட்டம் குறித்து அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்

திருப்பூர், அக். 24:   மோடி அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து ஜனவரி 8ம் தேதி நடக்கும் அகில இந்திய வேலை நிறுத்த போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.மோடி அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து அடுத்த ஆண்டு ஜனவரி 8ம் தேதி நடக்கும் அகில இந்திய வேலை நிறுத்த போராட்டம் நடத்துவது குறித்து அனைத்து கட்சிகளின் சார்பில் ஆலோசனை கூட்டம் திருப்பூர் பி.என். ரோடு ஏஐடியுசி சங்க அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜெகனாதன் தலைமை வகித்தார். சசிகுமார், சிஐடியு மாவட்ட தலைவர் உன்னிகிருஷ்ணன், எல்.பி.எப். ஜீவாசிதம்பரசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்களை நிறைவேற்றப்பட்டது: பொருளாதார மந்த நிலை தொடர்கிறது. வேலை இழப்பு, வறுமை அதிகரித்துள்ளது. தேசிய உற்பத்தி செல்வங்கள் தனியாருக்கும், அந்நிய நாட்டிற்கும் தாரைவார்க்கப்படுகிறது. உள்நாட்டு உற்பத்தி திறன் அழிக்கப்படுகிறது. மோடி அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து ஜனவரி 8ம் தேதி நடக்கும் அகில இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றினர். இதில், பல்வேறு தொழிற்சங்களை சேர்ந்த பலர் கலந்துகொண்டனர். முத்துசாமி நன்றி கூறினார்.

Tags : Party Advisory Meeting ,
× RELATED நாட்டின் ஒரு அங்குல நிலம் கூட...