×

டெங்கு கொசு ஒழிப்பு பணி சுகாதாரமற்ற குடியிருப்புகளுக்கு அபராதம்: அதிகாரிகள் நடவடிக்கை

அவிநாசி, அக். 24:   அவிநாசி ஒன்றியம் பழங்கரை ஊராட்சி பகுதியில் ஒன்றிய அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் சுகாதாரமற்ற குடியிருப்புகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.  திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஒன்றியம் பழங்கரை ஊராட்சி பகுதியில் அவிநாசி வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) சாந்தி லட்சுமி தலைமையில், மருத்துவ அலுவலர் சக்திவேல், ஊராட்சி செயலாளர் செல்வன் மற்றும் 50க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டனர். பழங்கரை ஊராட்சி கமிட்டியார் காலனி பகுதியில் வீடு, வீடாக சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் சில வீடுகளில் டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தி ஆகும் வகையில் சுகாதாரமற்ற நிலையில் இருந்தது கண்டறியப்பட்டது. அந்த வீடுகளில் குடிநீர் இணைப்பு உடனடியாக துண்டிக்கப்பட்டது. மேலும் அந்த வீட்டு உரிமையாளர்களுக்கு ரூ.40 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பழங்கரை ஊராட்சி பகுதி முழுவதும் கொசுக்களை ஒழிக்க புகை மருந்து அடித்து, அபேட் கரைசல் தெளித்து, குடிநீர் மேல் நிலை தொட்டிகள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டன. மேலும், கிராம மக்கள் அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

Tags : residents ,
× RELATED ஆந்திராவில் ஊருக்குள் புகுந்த 70...