×

தங்கல் திட்டத்தின் கீழ் வேளாண் மாணவிகள் பயிற்சி

உடுமலை, அக். 24:   கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தை சேர்ந்த இளநிலை வேளாண்மை பயிலும் நான்காம் ஆண்டு மாணவிகள், திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டத்தில் கிராமப்புற தங்கல் திட்டத்தின் கீழ் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.   இதில் கிராமப்புற மதிப்பீட்டின் ஒரு பகுதியாக கிளுவன் காட்டூர் வளங்களை அறிய வள வரைபடம், மக்களின் வாழ்க்கை நிலைமை குறித்து அறிய சமூக வரைபடம், விவசாயிகளின் பிரச்னைகளை அறிய விளைநிலங்களை பார்வையிட்டதோடு வெவ்வேறு பொதுத் தேவைகளுக்கான இடங்களையும் அவற்றின் தொலைவையும் தேவை வரைபடம் மூலம் பொதுமக்கள் கல்லூரி மாணவிகளின் உதவியோடு வரைந்தனர். அதன்பின் வேளாண் மாணவிகள் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை எவ்வாறு உயர்த்தலாம் என்பதை வரைபடத்தின் உதவியுடன் விளக்கி சில முன்னேற்ற வழி முறைகளையும் எடுத்துரைத்தனர். இறுதியாக, கிராமத்து மக்களின் பிரச்னைகளை கேட்டறிந்து அதற்கான தீர்வுகளையும் வழங்கினர்.

Tags : Thangal ,
× RELATED நெருக்கமாக இருந்த புகைப்படத்தை...