×

குமாரமங்கலம் கிராமத்தில் 3 ஆயிரம் பனை விதைகள் விதைப்பு

உடுமலை, அக். 24:  உடுமலை அடுத்த குமாரமங்கலம் கிராமத்தில் கல்லூரி மாணவிகள் 3 ஆயிரம் பனை விதைகளை விதைத்தனர்.  உடுமலை ஸ்ரீஜிவிஜி விசாலாட்சி மகளிர் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டக்குழு மற்றும் டாக்டர் அப்துல்கலாம் மக்கள் பாதுகாப்பு சேவை அறக்கட்டளை இணைந்து நடத்தும் பனை விதை மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா துங்காவி ஊராட்சி குமாரமங்கலம் கிராமத்தில் நடந்தது.இந்நிகழ்ச்சிக்கு மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமகிருஷ்ணன் தலைமை வகித்து, பனை விதை நடும் பணியை தொடங்கி வைத்தார். ஜிவிஜி கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் மலர்விழி, அபிராமி, கவிதா, பங்கஜம் மற்றும் அப்துல்கலாம் அறக்கட்டளை நிறுவன தலைவர் நவநீதராஜா, திருப்பூர் மாவட்ட அறக்கட்டளை செயலாளர் காந்தி ஆகியோர் பங்கேற்றனர்.  இந்நிகழ்ச்சியில் ஜிவிஜி கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட மாணவிகள் 3 ஆயிரம் பனை விதைகளை விதைத்தனர்.

Tags : Kumaramangalam ,village ,
× RELATED கள்ளச்சாராயம் விற்றவர் கைது