×

தீயணைப்புதுறை சார்பில் பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்து குழந்தைகளுக்கு விழிப்புணர்வு

குன்னூர், அக்.24: குன்னூர் மவுண்ட் பிளசண்ட் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் தீயணைப்பு துறையினர் சார்பில் குழந்தைகள் பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இதில், பட்டாசுகளை தொலைவில் இருந்து வெடிக்க வேண்டும், பட்டாசுகளை வெடிக்கும் போது இருக்கமான ஆடைகளை அணிந்து வெடிக்க வேண்டும். தொட்டியில் தண்ணீர் வைத்துக்கொண்டு பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என பல்வேறு  விழிப்புணர்வுகள் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் குன்னூர் தீயணைப்பு தலைமை அதிகாரி மோகன் தலைமை வகித்தார். முன்னிலை தீயணைப்பு வீரர்கள் குமார், சுப்ரமணி, கிருஷ்ணன் குட்டி மற்றும் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு பள்ளி குழந்தைகள் மத்தியில் விழிப்புணர்வு வழங்கினர்.

Tags : children ,fire department ,
× RELATED ஹரியாணாவில் தனியார் பள்ளிப் பேருந்து...