×

காரைக்காலில் இடி மின்னலுடன் மழை

காரைக்கால், அக்.24: காரைக்காலில் கடந்த 2 நாட்களாக  விடிய விடிய இடி மின்னலுடன் கன மழை பெய்தது. இரவு முதல் அதிகாலை வரை 111.3 மி மீட்டர் பதிவாகியுள்ளது. நேற்று முன்தினம் தமிழக பகுதியில் ரெட் அலார்டு விட்ட நிலையில், காரைக்கால் மாவட்டத்தில் நள்ளிரவு முதல் இடி மின்னடலுடன் கனமழை பெய்தது. இரவு முதல் அதிகாலை வரை 111.3 மி மீட்டர் பதிவாகியுள்ளது.

மழை காரணமாக பொது மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தாழ்வான குடியிருப்பு பகுதிகளில், பள்ளி, கல்லூரி மைதானங்களில் மழைநீர் தேங்கி உள்ளது. கன மழை எதிரொலியாக மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மாவட்ட கலெக்டர் விக்ராந்த் ராஜா விடுமுறை அளித்தார்.
நேற்று முழுவதும் லேசான தூரலுடன் மழை பெய்தது. மழையின் காரணமாக தீபாவளி பலகாரம் செய்ய முடியவில்லையென பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Tags : Showers ,thunderstorms ,Karaikal ,
× RELATED விழிப்புணர்வு வாசகத்துடன் பால்...