×

தென் மாவட்டங்களுக்கு ரயில் விட கையெழுத்து இயக்கம் துவக்கம்

கோவை, அக். 24: தென் மாவட்டங்களுக்கு ரயில் இயக்கக்கோரி கைெயழுத்து இயக்கம் கோவை ரயில் நிலையத்தில் நேற்று துவங்கியது. இதை, பி.ஆர்.நடராஜன் எம்.பி., துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ கார்த்திக், காங்கிரஸ் மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், ம.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் மோகன்குமார், தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். இது பற்றி பி.ஆர்.நடராஜன் எம்.பி., கூறுகையில், ‘’கோவை-திண்டுக்கல் ரயில் மார்க்கத்தில் அகல ரயில் பாதை அமைத்து 2 ஆண்டாகி விட்டது. ஆனால், இதுவரை இந்த பாதையில் ரயில்கள் இயக்கப்படவில்லை. மீட்டர் கேஜ் ரயில் பாதையாக இருந்தபோது கோவையில் இருந்து மதுரை, ராமேஸ்வரம் உள்ளிட்ட தென்மாவட்ட பகுதிகளுக்கு தினமும் 10-க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டது.

கோவையில் இருந்து பொள்ளாச்சி வழியாக உடுமலை, மதுரை வழியாக தூத்துக்குடி, கன்னியாகுமரி, செங்கோட்டை பகுதிக்கு ரயில் விடவேண்டும். கோவையில் இருந்து பெங்களூருக்கு இரவு நேரத்தில் ரயில் இயக்கவேண்டும். பயணிகளிடம் கையெழுத்து பெற்று ரயில்வே அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்க இந்த கையெழுத்து இயக்கம் துவக்கப்பட்டுள்ளது. கோவையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு ரயில்கள் இயக்க ேதவையான முயற்சியை ரயில்வே நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்’’ என்றார்.

Tags : Signature Movement for Southern Districts ,
× RELATED தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த...