×

நாகை கலெக்டர் அலுவலகத்தில் லிப்ட் பாதியில் நின்றதால் பொதுமக்கள் தவிப்பு

நாகை,அக்.24: நாகை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் லிப்ட் முறையாக பராமரிப்பு செய்யாத காரணத்தால் பயணம் செய்வோர்கள் மாட்டிக்கொள்ளும் அவலம் உள்ளது. நாகை கலெக்டர் அலுவலகம் 3 தளங்களை கொண்டது. 32 துறைகள் செயல்படுகிறது. இதில் மிக முக்கியமான துறைகளான கனிமவளம், மகளிர் திட்டம் என்று பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் துறைகள் 3வது தளத்தில் உள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தினந்தோறும் கலெக்டர் அலுவலகம் வந்து செல்கின்றனர். பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஒரு லிப்ட், அலுவலர்கள் பயன்பாட்டிற்காக ஒரு லிபட் என்று இரண்டு தனித்தனியாக உள்ளது. இதில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான லிப்ட் பழுது ஏற்பட்டு பல ஆண்டு காலம் ஆகிவிட்டது. இவ்வாறு பழுது ஏற்பட்ட லிப்டை அவ்வப்பொழுது சீர் செய்து வருகிறனர்.

ஆனால் முறையாக பராமரிப்பு செய்வது இல்லை. இதனால் லிப்ட் அடிக்கடி பழுது ஏற்பட்டு அதில் செல்வோர்கள் மாட்டி கொள்ளும் நிலை நீடித்து வருகிறது. இந்த லிப்டை பராமரிப்பு செய்ய பொதுப்பணித்துறையின் கீழ் இயங்கும் மின்சார பிரிவு துறையினர் பராமரிப்பு செலவு செய்வதாக மாதம் தோறும் கணக்கு மட்டும் எழுதி வைக்கின்றனர். இதனால் இதில் செல்லுவோர்கள் அடிக்கடி மாட்டிக்கொள்ளும் அவலம் நீடிக்கிறது. நேற்று அந்த லிப்ட் 2வது தளம் சென்றவுடன் அப்படியே நின்றுவிட்டது. இதனால் இதில் சென்ற பொதுமக்கள் சுமார் 20 நிமிடம் மாட்டி கொண்டு சிக்கினர். நீண்ட போராட்டத்திற்கு பின்னர் போராடி சிக்கிய பொதுமக்களை அங்கு இருந்த ஊழியர்கள் மீட்டனர்.

Tags : Naga Collector ,office ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குள் சிறுத்தை: தவறான தகவல்