×

அத்திவரதர் குறித்து சர்ச்சை கருத்து சிறுமுகை துணிக்கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவை, அக்.24:கோவை மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகையை சேர்ந்தவர் காரப்பன். இவர் அந்த பகுதியில் துணிக்கடை நடத்தி வருகிறார். திராவிடர் கழகத்தில் உறுப்பினராகவும் உள்ளார். இவர் கடந்த மாதம் கோவை பீளமேட்டில் நடந்த கருத்தரங்கம் ஒன்றில் அத்திவரதர் மற்றும் கிருஷ்ணர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்திருந்தார். காரப்பன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜ நிர்வாகிகள் கோவை மாநகர கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். மேலும் இது குறித்து பீளமேடு காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் மற்றும் மதக்கலவரம் ஏற்படும் வகையில் பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் காரப்பன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

Tags : owner ,
× RELATED மாற்றுத் திறனாளிகளை இழிவுபடுத்துவதா?.....