×

மழைக்கு முன் வானில் திரண்ட கருமேகம் சீர்காழியில் கால்நடைகளால் போக்குவரத்துக்கு இடையூறு வாகன ஓட்டிகள் அவதி

சீர்காழி, அக்.24:சீர்காழி பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் படுத்து கிடக்கும் கால்நடைகளால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றன. சீர்காழி தென்பாதி, கடைவீதி, பிடாரி வடக்கு வீதி, புதிய பழைய பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் கால்நடைகள் சாலைகளில் அதிகளவில் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றன. கால்நடைகள் அனைத்தும் பெரும்பாலும் சீர்காழி நகரில் கொட்டப்படும் குப்பைகளையும், சுவற்றில் ஒட்டப்படும் போஸ்டர்களையும் சாப்பிட்டு உயிர் வாழ்கின்றன. சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளின் உரிமையாளர்கள் யார் என்று தெரியவில்லை. கால்நடைகள் மழை பெய்தாலும் வெயில் அடித்தாலும் தனது இருப்பிடமாக சாலையிலேயே பயன்படுத்துகின்றன. கால்நடைகள் திடீரென்று சாலைகளை கிடைக்கும்போது வாகனங்களில் வருபவர்கள் விபத்துக்களில் சிக்குகின்றன.
இதனால் பல உயிரிழப்பு சம்பவங்களும் நடந்துள்ளது. பழக்கடைகள் காய்கறி கடைகளில் கால்நடைகள் உள்ளே நுழைந்து பழம் காய்கறிகளை தின்று விடுவதும், சேதப்படுத்தும் தொடர்கதையாக இருந்து வருகிறது.

சில சமயங்களில் சாலைகளில் நடந்து செல்பவர்களை கால்நடைகள் அச்சுறுத்தும் சம்பவமும் நடந்து வருகிறது. கால்நடைகளை வளர்ப்பவர்கள் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுவதால் கால்நடைகளை மர்ம நபர்கள் திருடிச் செல்லும் சம்பவமும் அவ்வப்போது நடந்து வருகிறது. ஆனால் இதையெல்லாம் கால்நடை வளர்ப்போர் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. சில கன்று ஈன்ற கால்நடைகள் இரவு முழுவதும் நகர் பகுதியில் சுற்றிவிட்டு விடியற்காலையில் வீட்டின் உரிமையாளர் வீட்டுக்கு சென்று தான் ஈன்ற கன்றுகளுக்கு பால் கொடுத்துவிட்டு வரும் ருசிகர சம்பவம் நடந்து வருகிறது. கால்நடைகளை வீதிகளில் சுற்ற விடாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி மீறி கால்நடைகளை வீதிகளில் விடும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Motorists ,season ,
× RELATED திருப்பதிசாரம் டோல்கேட்டில் கட்டணம் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி