×

மரக்கன்று நடும் விழா

சோமனூர், அக்.24:  சோமனூர் அடுத்த பதுவம்பள்ளி ஊராட்சியில் செலம்பராயம்பாளையத்தில் மரக்கன்று நடும்விழா மற்றும் புதிய தார்சாலைக்கான பூமி பூஜை நடைபெற்றது .பதுவம்பள்ளி ஊராட்சியின் முன்னாள் தலைவர் தனபாக்கியம் செந்தில் வரவேற்றார். சூலூர் எம்எல்ஏ கந்தசாமி தலைமை வகித்தார். சூலூர் ஒன்றிய முன்னாள் சேர்மன் மாதப்பூர் பாலு, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் தோப்பு அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிரதம மந்திரியின் சாலை விரிவாக்கத் திட்டத்தில்  இருந்து செலம்பராயம் பாளையத்தில் முதல் தென்னம்பாளையம் வரை ரூ. 84 லட்சம் மதிப்பில் தார்சாலை அமைப்பதற்காக பூமி பூஜை நடைபெற்றது. தொடர்ந்து செலம்பராயம்பாளையம் குட்டை பகுதியில் பசுமை வனம் அமைப்பதற்காக சூலூர் எம்எல்ஏ கந்தசாமி மரக்கன்றுகளை நட்டு துவக்கி வைத்தார். விழாவில் திராளன பொதுமக்கள் கலந்துகொண்டனர். முடிவில் கெளசிகாநதி செல்வராஜ் நன்றி கூறினார்.

Tags : Planting Ceremony ,
× RELATED மணக்குடி அரசு பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா