×

காவிரி படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்ககோரி 29ம் தேதி வேலை நிறுத்த போராட்டம் பேரழிப்புக்கு எதிரான பேரியக்கம் முடிவு

தஞ்சை, அக். 24: காவிரி படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்ககோரி வரும் 29ம் தேதி தமிழகம் முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று தஞ்சையில் பேரழிப்புக்கு எதிரான பேரியக்கம் அறிவித்துள்ளது. தஞ்சையில் பேரழிப்புக்கு எதிராக பேரியக்க தலைவர் லெனின் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழக மக்கள் மீது மத்திய அரசு ஏராளமான பேரழிப்பு திட்டங்களை திணித்து வருகிறது. ஹைட்ரோ கார்பன் திட்டம், சாகர்மாலா திட்டம், அனல் மின் நிலையங்கள், அணுஉலை திட்டங்கள், கூடங்குளத்தில் அணுக்கழிவுகளை கொட்டி வைக்கும் திட்டம், 8 வழிச்சாலை திட்டம், விவசாய நிலங்களில் கெயில் குழாய்கள் பதிக்கும் திட்டம், உயர் மின்கோபுரங்களை வேளாண் நிலங்களில் அமைக்கும் திட்டம், நீட் தேர்வு திட்டம், வடமாநிலத்தவர்களுக்கு தமிழகத்தில் வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் தமிழக மக்கள் மீது திணிக்கப்படுகிறது. இத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டால் தமிழக மக்களின் வாழ்வாதாரங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டுவிடும்.

எனவே மத்திய, மாநில அரசுகள் இந்த அழிவு திட்டங்களை கைவிட வேண்டும். காவிரி படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை ரத்து செய்ய வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 29ம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து பகுதி மக்களும் தங்களின் உரிமைகளை காப்பதற்காக தானே முன்வந்து வேலை நிறுத்த போராட்டத்தை நடத்த வேண்டும் என்றார்.

Tags : strike action ,zone ,Cauvery ,
× RELATED சிகரெட் பிடிப்பதை வீட்டில் சொல்வேன்...