×

கோவை-தூத்துக்குடி பேருந்து சேவை ரத்து

கோவை, அக்.24:  கோவையில் இருந்து தூத்துக்குடிக்கு தினமும் இயக்கப்படும் தூத்துக்குடி பேருந்து ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை மீண்டும் இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் கோவையில் இருந்து தினமும் இரவு 9.30 மணியளவில் தூத்துக்குடிக்கு பேருந்து இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக இந்த பேருந்து சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. பண்டிகை காலங்கள் நெருங்கி வரும் சூழலில், மீண்டும் அந்த பேருந்தை இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து பயணிகள் கூறுகையில், ‘‘வழித்தடம் 625ல் இந்த பேருந்து இயக்கப்பட்டு வந்தது. ஆனால், பேருந்து சேவை தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.  தீபாவளி பண்டிகை வரும் இந்த நேரத்தில் தனியார் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதால் பயணிகள் நலன் கருதி, ரத்து செய்யப்பட்ட பேருந்து  சேவையை மீண்டும் செயல்படுத்த வேண்டும்’’ என்றனர்.கோவை, அக்.24:  கோவையில் இருந்து தூத்துக்குடிக்கு தினமும் இயக்கப்படும் தூத்துக்குடி பேருந்து ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை மீண்டும் இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் கோவையில் இருந்து தினமும் இரவு 9.30 மணியளவில் தூத்துக்குடிக்கு பேருந்து இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக இந்த பேருந்து சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. பண்டிகை காலங்கள் நெருங்கி வரும் சூழலில், மீண்டும் அந்த பேருந்தை இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து பயணிகள் கூறுகையில், ‘‘வழித்தடம் 625ல் இந்த பேருந்து இயக்கப்பட்டு வந்தது. ஆனால், பேருந்து சேவை தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.  தீபாவளி பண்டிகை வரும் இந்த நேரத்தில் தனியார் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதால் பயணிகள் நலன் கருதி, ரத்து செய்யப்பட்ட பேருந்து  சேவையை மீண்டும் செயல்படுத்த வேண்டும்’’ என்றனர்.

Tags : Tuticorin ,
× RELATED தூத்துக்குடியில் பணப்பட்டுவாடா செய்ததாக ஒருவர் கைது!!