ஊரணிபுரத்தில் சிமென்ட் காரை பெயர்ந்து மின்கம்பம் விழும் அபாயம் பொதுமக்கள் அச்சம்

ஒரத்தநாடு, அக். 24: ஊரணிபுரத்தில் எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ள சேதமடைந்த மின்கம்பத்தை விரைந்து மாற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு ஊரணிபுரத்தில் பட்டுக்கோட்டையில் இருந்து கந்தர்வக்கோட்டை செல்லும் மெயின்ரோட்டில் ஒரு மின்கம்பம் உள்ளது. இந்த மினகம்பம் சேதமடைந்து சிமென்ட் காரைகள் பெயர்ந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளது. இந்த மின்கம்பத்தில் இருந்து 30க்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் தரப்பட்டுள்ளது. வேகமாக காற்று அடித்தால் கூட இந்த மின்கம்பம் உடைந்து கீழே சாய்ந்து விடும். இந்த சாலை வழியாக ஏராளமானோர் தினம்தோறும் சென்று வருகின்றனர்.

அசம்பாவிதம் ஏற்படும் முன் சேதமடைந்த மின்கம்பத்தை மாற்ற வேண்டு ஊரணிபுரம் மின் உதவி பொறியாளரிடம் பொதுமக்கள் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன் சேதமடைந்த மின்கம்பத்தை மாற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஒரத்தநாடு மின் செயற்பொறியாளருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: