திருவையாறு அருகே மணல் ஏற்றி வந்த லாரி பறிமுதல் டிரைவர் தப்பியோட்டம்

திருவையாறு, அக். 24: திருவையாறு அடுத்த மணக்கரம்பை பைபாஸ் ரவுண்டானாவில் நடுக்காவேரி சப்இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை நிறுத்தினர். அப்போது லாரியை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பியோடிவிட்டார். இதையடுத்து லாரியை சோதனை செய்தபோது அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்து நடுக்காவேரி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Thiruvaiyaru ,
× RELATED தொட்டியம் அருகே முன்விரோத தகராறில் லாரி டிரைவர் கொலை வழக்கில் 3 பேர் கைது