×

மின்சாரம் தாக்கி பெண் உள்பட 2 பேர் பலி

ஈரோடு, அக்.24:ஈரோடு  மாவட்டம், கோபி கூகலூர் குச்சாலி வீதியை சேர்ந்தவர் மாணிக்கம் மனைவி  பழனியம்மாள் (70). இவர், வீட்டின் முன்பு தண்ணீர் தொட்டியை தகர ஷீட் போட்டு  மூடி வைத்திருந்தார். நேற்று முன்தினம் தண்ணீர் தொட்டியில் முகம்  கழுவினார். அப்போது, தகர ஷீட்டின் மேல் மின்கசிவு ஏற்பட்டது. அப்போது,  அதில் போடப்பட்டிருந்த ஈர சாக்கை எடுக்க முயன்றபோது, உடலில் மின்சாரம்  பாய்ந்து தூக்கி வீசப்பட்டார்.
அவரது குடும்பத்தினர், மெயினை ஆப்  செய்து, பழனியம்மாளை மீட்டு கோபி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு  அவரை பரிசோதித்த டாக்டர்கள், பழனியம்மாள் ஏற்கனவே இறந்து விட்டதாக  தெரிவித்தனர். இது குறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து  வருகின்றனர். அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் குணமங்கலம்  அரிசன தெருவை சேர்ந்தவர் அம்பிகேஸ்வரன் (34), கட்டிட தொழிலாளி. இவர், ஈரோடு மாவட்டம், நசியனூர் நாலுவள்ளக்காடு பகுதியில் உள்ள தனியார் ஏற்றுமதி  நிறுவனத்தில் தங்கி, புதிய கட்டிட கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தார்.

நேற்று  முன்தினம் அங்குள்ள டிரம்மில் இருந்த தண்ணீரை எடுத்து ஊற்றியபோது,  டிரம்மில் இருந்த மோட்டார் வயரில் ஏற்பட்ட மின்கசிவால், அம்பிகேஸ்வரன் மீது  மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். அவரை, சக ஊழியர்கள் மீட்டு  ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து  விட்டு, வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து  அம்பிகேஸ்வரனின் மனைவி திலகவதி (26) கொடுத்த புகாரின்பேரில் போலீசார்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Electricity attack ,
× RELATED சாயல்குடி அருகே பெண்ணை கடத்தியதால்...