×

மாவட்டத்தில் 173 பள்ளிகளில் கராத்தே வகுப்பு துவக்கம்

ஈரோடு, அக். 24: ஈரோடு மாவட்டத்தில் 173 அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு தற்காப்பிற்காக கராத்தே பயிற்சி வகுப்புகள் நேற்று துவங்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவியர் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் அனைத்து அரசு பள்ளிகளிலும் கராத்தே பயிற்சி துவங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, தமிழக அரசின் சார்பில் அனைத்து அரசு பள்ளிகளிலும் 3 மாதத்திற்கு கராத்தே பயிற்சி  அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் 173 அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவியர்களுக்கு கராத்தே பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கான பயிற்சி நேற்று ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இதில், கராத்தே பயிற்சியாளர் ஜெயகாந்தி கலந்து கொண்டு மாணவியருக்கு பயிற்சி அளித்தார்.

மாணவிகள் பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்படும்போது தங்களை காத்துக் கொள்ள மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், 300க்கும் மேற்பட்ட மாணவியர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
இதேபோல், மாவட்டத்தில் உள்ள 173 அரசு பள்ளிகளிலும் இந்த கராத்தே பயிற்சி துவங்கியது. 3 மாதம் பயிற்சி அளிக்கப்படும். அனைத்து அரசு பள்ளிகளிலும் இதற்கான பயிற்சியை 10 மாதத்திற்கு கொண்டு வர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக கராத்தே பயிற்சியாளர்கள் தெரிவித்தனர்.

Tags : Commencement ,schools ,district ,
× RELATED பிரதமர் ரோடு ஷோவில் மாணவர்கள்...