×

நவ.29ம் தேதி கடைசி திருவண்ணாமலை கலெக்டரை கண்டித்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

மன்னார்குடி, அக். 24: திருவண்ணாமலை கலெக்டரின் ஊழியர் விரோத போக்கை கண்டி த்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர் மன்னார்குடியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமியின் ஊழியர் விரோத போக் கை கண்டித்தும், தெலுங்கானா மாநிலத்தில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்ய வலியுறுத்தியும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் மன்னார்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக வாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்திற்கு சங்க வட்ட கிளை தலைவர் இலரா தலைமை வகித்தார். வட்ட கிளை துணை தலைவர்கள் ஜெகதீஷ், பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட துணைதலைவர்கள் ராஜேந்திரன், மோகன் ஆகியோர் பேசினர். முடிவில் வட்ட கிளை துணைச் செயலாளர் அய்யப்பன் நன்றி கூறினார். நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு ஊரகவளர்ச்சிதுறை வட்டச்செயலாளர் முரளி தலைமை வகித்தார்.அரசு ஊழியர் சங்க வட்டச்செயலாளர் ஆறுமுகம் சிறப்புரையாற்றினார்.

வலங்கைமான்: வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாநில மையத்தின் முடிவின் படி உணவு இடைவேளையின் போது ஊரகவளர்ச்சித்துறை அலுவலக சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நேற்று மதியம் உணவு இடைவேளையின் போது ஊரகவளர்ச்சித்துறை அலுவலக சங்கத்தின் வட்டத்தலைவர் செந்தில் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்பாட்டத்தின்போது மாநில செயற்குழு உறுப்பினர் ராஜசேகரன், ஊராட்சி எழுத்தர்கள் உள்ளிட்ட பலரும் திருவண்ணாமலை கலெக்டர் ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்களை கடுமையான வார்த்தைகளால் அச்சுறுத்தி மிரட்டியதை கண்டித்தும், தெலங்கானாவில் நாற்பதாயிரம் போக் குவரத்து ஊழியர்களை பணி நீக்கம் செய்ததை கண்டித்தும் பேசினர். இதில் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். முடிவில் ராமமூர்த்தி நன்றி கூறினார்.

Tags : Rural Development Officers Association ,Thiruvannamalai Collector ,
× RELATED திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில்...