×

தோட்டக்கலைத்துறை அதிகாரி அறிவுறுத்தல் வலங்கைமான் வட்டார விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய 30ம் தேதி கடைசி

வலங்கைமான், அக்.24: வலங்கைமான் வட்டார விவசாயிகளை பிரதம மந்திரி பயிர் காப்பீடுத் திட்டத்தின் கீழ் நடப்பு சம்பா மற்றும் தாளடி பருவ நெற்பயிருக்கு பயிர் காப்பீடு செய்ய வருகிற 30ம்தேதி கடைசி நாளாகும். இதுகுறித்து வேளாண்மை உதவி இயக்குநர் பாலசுப்ரமணியன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் ஏற்படும் பயிர் இழப்புகளுக்கு உரிய இழப்பீடு பெறவும், அவர்களின் பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் பிரதம மந்திரி பயிர் காப்பீடுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது சம்பா, தாளடி பருவ நெற்பயிருக்கு பிரதம மந்திரி பயிர் காப்பீடுத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டதில் கடன்பெறும் விவசாயிகள் அவர்கள் கடன் பெறும் வங்கிகளில் கட்டாயமாக பயிர் காப்பீடுத் திட்டத்தில் பதிவு செய்யப்படுவார்கள். கடன் பெறாத விவசாயிகள் பொது சேவை மையங்கள் மூலமாகவோ, வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம்.

சம்பா, தாளடி பயிரிடும் விவசாயிகள் இத்திட்டத்தில் பதிவு செய்ய கடைசி நாள் நவம்பர் 30ம் தேதியாகும். இறுதி நாள் வரை காத்திருக்காமல் உடனடியாக பிரதம மந்திரி பயிர் காப்பீடுத் திட்டத்தில் காப்பீடுத் தொகையை செலுத்தி முன்கூட்டியே தங்களது பயிர்களை பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது. பயிர் காப்பீடு கட்டணமாக விவசாயிகள் ஏக்கருக்கு ரூபாய் 465 செலுத்த வேண்டும். விவசாயிகள் இத்திட்டத்தில் பதிவு செய்யும்போது முன்மொழி விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை ஆகியவற்றை இணைத்து கட்டணத் தொகையை செலுத்தி அதற்கான ரசீதையும் பொதுசேவை மையங்கள் மற்றும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களில் பெற்றுக் கொள்ள வேண்டும் என வலங்கைமான் வட்டார விவசாயிகளை வேளாண்மை உதவி இயக்குநர் பாலசுப்ரமணியன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags :
× RELATED தமிழகத்திற்கு பிரதமர் அடிக்கடி...