×

மேலாளரை திட்டிய 3 ஊழியர்கள் கைது

ஈரோடு, அக்.24: ஈரோடு பெருந்துறை ரோட்டில், தனியார் டிபார்ட்மென்ட் ஸ்டோர் இயங்கி வருகிறது. இங்கு ஈரோடு ஐயனாரப்பன் கோயில் தெருவை சேர்ந்த ராமசாமி மகன் ஐயப்பன் (31), மேலாளராக வேலைபார்த்து வருகிறார். கடை ஊழியர்களான ராஜாக்காட்டை சேர்ந்த செல்லதுரை (41), பெரியார்நகர் நல்லப்பா வீதியை சேர்ந்த முத்துக்குமார் (40), வீரப்பம்பாளையத்தை சேர்ந்த சிவக்குமார் (31) ஆகியோர் நேற்று முன்தினம் வேலையில் அலட்சியமாக இருந்ததால் மேலாளர் ஐயப்பன், அவர்களை கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த 3 பேரும், ஐயப்பனை தகாத வார்த்தையால் திட்டி மிரட்டல் விடுத்தனர். இது குறித்து ஐயப்பன் வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்லதுரை, முத்துக்குமார், சிவக்குமார் ஆகியோரை கைது செய்தனர்.

Tags :
× RELATED எல்ஐசி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்