×

தீபாவளி போனஸ் வழங்க கோரி ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கரூர், அக். 24:  கரூரில் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கரூர் தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சிஐடியூ மாவட்ட தலைவர் ஜீவானந்தம், மாவட்ட செயலாளர் முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில், நகராட்சியில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள், ஓட்டுநர், மின் பணியாளர் உட்பட அனைவருக்கும் தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

Tags : Rural Development Local Government ,Diwali ,
× RELATED கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு 10% போனஸ்