×

பாசன வாய்க்கால் மதகில் ஷட்டர் அமைக்காததால் கொண்ணையடி ஏரியில் தண்ணீர் வீணாகும் அவலம்

மன்னார்குடி, அக்.24: கூப்பாச்சிக்கோட்டை கொண்ணையடி ஏரியில் பாசன மதகு பழுது செய்யப் பட்டு 3 மாதங்கள் ஆகியும் ஷெட்டர் அமைக்கதால் தண்ணீர் வீணாவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கூப்பாசிக்கோட்டை கிராமத்தில் கொண்ணையடி ஏரி உள்ளது. சுமார் 500க்கு மேற்பட்ட ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி மூலம் சுமார் 750 க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் சாகுபடி வசதி பெறுகிறது. இந்த ஏரியில் உள்ள சின்ன மதகு பாசன வாய்க்காலில் உள்ள முகப்பு பாலம் சேதமடைந்த நிலையில் இருந்ததால் அதனை சீரமைத்து தண்ணீரை தேக்கும் ஷெட்டர் (தண்ணீரை தேக்கும் இரும்பு கதவு) அமைக்க பொதுப்பணித்துறை மூலம் ஒப்பந்தம் விடப்பட்டு வேலைகள் நடைபெற்று வந்தது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பே சின்ன மதகு பாலம் அமைக்கும் பணி முடிந்த நிலையில் இதுவரை தண்ணீரை தேக்கி வைக்கும் ஷெட்டர் அமைக்கப்படவில்லை. மேலும் ஏரியின் கரை சீரமைக்கும்போது ஏற்கனவே கஜாபுயலின் போதும் ஏரியில் விழுந்து கிடக்கும் மரங்களும் அகற்றபடவில்லை. பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஏரியில் படித்துறை அமைக்கப்படமாலும் இருக்கிறது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை பலனில்லை என அப்பகுதி விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து கூப்பாசிக்கோட்டை சேர்ந்த விவசாயி பொன்முடி கூறுகையில், தற்பொழுது பெய்து வரும் தொடர் மழைகாரணமாக ஏரியில் தண்ணீர் பெருகி வந்துள்ளது. ஏரிக்குள் விழுந்து கிடக்கும் மரங்கள் அகற்றப்படாததால் மரங்கள் மிதந்து தண்ணீர் செல்லும் பாசன மற்றும் வடிகால் வாய்க்கால்களை அடைக்க வாய்ப்புள்ளது. மதகு ஷட்டர் அமைக்காமல் இருப்பதால் ஏரியில் முழுமையாக நீர் சேமிக்க வாய்ப்பில்லை. வாய்க்காலில் முழுமையாக நீர் செல்வதால் சமீபத்தில் நடவு செய்யப்பட்ட பல எக்டேர் பயிர்கள் மூழ்கும் அபாயம் உள்ளது. எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் இதில் கவனம் செலுத்தி போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு ஷட்டர் அமைக்க வேண்டும். ஏரிக்குள் விழுந்து கிடக்கும் மரங்களை அகற்ற வேண்டும். மேலும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக படித்துறை கட்டித்தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து விவசாயிகளின் கோரிக்கையாகும் என்றார்.

Tags : lake ,Konanadyi ,
× RELATED குண்ணம் ஊராட்சியில் தனியார்...