×

கரூர் மாவட்டத்தில் 142 எக்டேரில் மக்காச்சோளப்பயிர் சாகுபடி கலெக்டர் தகவல்

கரூர், அக்.24: கரூர் மாவட்டத்தில் 142 எக்டேரில் மக்காச்சோளப்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் அன்பழகன் கூறினார்.
கரூர் மாவட்டம் க.பரமத்தி ஒன்றியம் மேகரை ஊராட்சி புன்செய்காள குறிச்சியில் மக்காச்சோள பயிரை தாக்குகின்ற அமெரிக்கன் படைப்புழுவை கட்டுப்படுத்தும் பணிகளை கலெக்டர் அன்பழகன்பார்வையிட்டார். பின்னர்அவர் கூறுகையில், கரூர் மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் இதுவரை 142 எக்டர் பரப்பில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மக்காச்சோள பயிரை தாக்குகின்ற அமெரிக்கன் படைப்புழுவை கட்டுப்படுத்துவதற்குகடந்த மூன்றுமாத காலமாக பல்வேறு ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் கரூர் மாவட்டத்தில் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது 71எக்டர் பரப்பரளவில் மக்காச்சோள பயிர்களை அமெரிக்கன் படைப்புழு தாக்கம் உள்ளது. இதைக்கட்டுப்படுத்த ஒருஎக்டேருக்கு ரூ.4500 மதிப்புடைய மருந்துகளை அரசு விலையில்லாமல் வழங்கி வருகிறது. அத்துடன் இருமுறை மருந்து தெளிப்பதற்கு ரூ.1000 மானியமும் வழங்கப்படுகிறது. இந்த மருந்து தெளிப்பு பணிக்காக 74உழவர் உற்பத்தியாளர் குழுவில் உள்ளவர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். ஒவ்வொரு குழுவிலும் 100உறுப்பினர்கள் உள்ளனர். மேலும் 90எக்டர் பரப்பரளவில் உள்ள பயிர்களை பாதுகாப்பதற்கு தற்போது மருந்துகள் கையிருப்பு உள்ளது.

மக்காச்சோளம் சாகுபடி செய்யும் விவசாயிகள் அனைத்துஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளையும், கையாள வேளாண்மை விரிவாக்க அலுவலர்கள் மூலமாக துண்டுபிரசுரங்கள், சிறப்பு முகாம்கள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்அடிப்படையில் கோடை உழவு ஆழஉழுதல், அடி உழவில் வேப்பம் புண்ணாக்கு ஏக்கர் 100கிலோஇட வேண்டும். மக்காசோள விதையுடன்விதை நேர்த்தி செய்துவிதைத்தல், பெவேரியா பேசியானா அல்லது தையோமெத்தாக்சிம் மருந்துகளை ஒருகிலோ விதையில் 10கிராம் கலப்பது, உளுந்து, பாசிப்பயறு ஊடுபயிராகவும், எள், சூரியகாந்தி தட்டைபோன்ற பயறுகள் வரப்பு பயிராகவும்சாகுபடி செய்தல், ஏக்கருக்கு 20இனகவர்ச்சி பொறிகள் வைத்தல், விதைப்பு செய்த 15முதல் 20தினங்களுக்குள் அஸாடிரேக்ஷன் 10லிட்டர் தண்ணீருக்கு 20மிலி என்ற அளவில் அல்லது இமாமேக்ஷன் பென்சோயேட் 10லிட்டர் தண்ணீருக்கு 4கிராம், என்ற அளவில் தெளிக்கவேண்டும். இரண்டாவது தெளிப்பு 20முதல் 45தினங்களுக்குள் தெளிக்கவேண்டும். ஒருஎக்டருக்குமெட்டாரைசியம் அனிசோபிளே 4கிலோ அல்லது 10லிட்ட் தண்ணீருக்கு 4கிராம் என்றஅளவில் தெளிக்கவேண்டும். ஸ்பைனோட்ராம் 5மிலி 10லிட்டருக்கு என்ற அளவில் தெளித்து பயிர்களை பாதுகாக்க வேண்டும்.

தற்போது இம்மருந்து க.பரமத்தி, அரவக்குறிச்சி,கடவூர், கிருஷ்ணராயபுரம் வட்டாரங்களில் தெளிக்கப்பட்டு வருகிறது. மக்காச்சோள பயிர்களில் அமெரிக்கன் படைப்புழு தாக்கம் உள்ள விவசாயிகள் சம்பந்தப்பட்ட வட்டார வேளாண் உதவி இயக்குனர்கள் அலுவலகம் மற்றும் வேளாண் விரிவாக்க அலுவலர்களை தொடர்புகொண்டுபயனடைய வேண்டும் என்றார். வேளாண்மை இணைஇயக்குனர் வளர்மதி, வேளாண்மை பொறியில் துறை நிர்வாக பொறியாளர் ராஜ்குமார், தோட்டக்கலை துறை இயக்குனர் மோகன்ராம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.Tags : Karur district ,
× RELATED முதல்வருக்கு அடிக்கடி தொல்லை...