×

கொப்பரை தேங்காய் கிலோ ரூ.97க்கு ஏலம்

க.பரமத்தி, அக்.24: இரு வெவ்வேறு ஒன்றிய பகுதிகளான புன்னம் ஊராட்சி, புகழூர், வேலாயுதம்பாளையம்,நொய்யல், சேமங்கி, நடையனூர், மறவாபாளையம், தவிட்டுப்பாளையம், திருக்காடுதுறை, உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட ஊர்களில் விலையும் தேங்காய்களை உடைத்து காய வைத்து தங்களது தேவைக்கு எண்ணை எடுத்தது போக மீதம் உள்ள பருப்பினை அருகேயுள்ள சாலைபுதூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் திங்கள் தோறும் நடைபெறும் ஏலத்திற்கு கொண்டு செல்கின்றனர்.அங்கு நடந்த ஏலத்திற்கு சுமார் 737மூட்டைகளில் 34680கிலோ கொப்பரை தேங்காய் கொண்டு வரப்பட்டு ஏலம் விடப்பட்டது. கொப்பரை தேங்காய் ஒரு கிலோ சராசரி விலையாக ரூ.92, ஒரு கிலோ கொப்பரை தேங்காய் முதல் ரகம் அதிக விலையாக ரூ.97, ஏலம் போனது. தேங்காய்களுக்காக நடந்த ஏலத்தில் சுமார் 13,317தேங்காய்கள் ஏலம் விடப்பட்டன. ஒரு கிலோ தேங்காய்கள் விலை குறைந்த விலையாக ரூ.22, ஒரு கிலோ தேங்காய் அதிக விலையாக ரூ.27 ஏலம் போனது.


Tags : Auction ,
× RELATED 5 கோடி ரூபாய்க்கு டைட்டானிக் மரக்கதவு ஏலம்