×

கரூர் மாவட்டத்தில் 1.25லட்சம் டன் உணவு தானியம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம்

கரூர், அக்.24: கரூர் மாவட்டத்தில் 1.25லட்சம் டன் உணவு தானியம் உற்பத்தி செய்யஇலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.கரூர் மாவட்டத்தின் ஆண்டுசராசரி மழை அளவு 652.20மிமீ. சராசரி அளவை விட குறைந்த அளிவிலேயே மழை பெய்துவருகிறது. எனினும் பரவலாக பெய்துவரும் மழையைப் பயன்படுத்தியும், காவிரியாற்றில் வரும் நீரைப்பயன்படுத்தியும் விவசாயிகள் சாகுபடி பணிகளை மேற்கொண்டுள்ளனர்.நடப்பாண்டு கரூர் மாவட்டத்தில் 1.25 லட்சம் டன் உணவு தானிய உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு அடைய தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. உணவு தானிய உற்பத்தி இலக்கினை சரியாக அடைந்திட ஏதுவாக சான்று பெற்ற நெல்ரக விதைகளான பிபிடி5204, கோ50, கோ51, டிகேஎம்13 ஆகியவை 113.37 டன், சிறுதானியங்கள்சோளம் சிஎஸ்வி20, கே12, குதிரைவாலி கோ2, வரகு கோ3, ஆகிய ரகங்கள் 3.87டன், துவரை கோஆர்ஜி7, உளுந்துவிபிஎன்5, விபிஎன்6, கொள்ளு பிஒய்2, மொத்தம் 32.28 டன், பயறு வகை விதைகள் மற்றும் நிலக்கடலை விதை ரகம் கே6, கே9, ட்டிஎம்வி13, கோ6. கோ7, மற்றும் தாரணி ரகம் மொத்தம் 10.06 டன் இருப்பு வைக்கப்பட்டு மானிய விலையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இருப்பில் உள்ள அனைத்து விதைகளும் மானிய விலையில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படுகின்றது. அதன்படி தேசிய வேளாண்மை வளர்ச்சித்திட்டம் நெல் இயக்கத்தின் மூலம் கோ50, கோ51, டிகேஎம்13 ஆகிய நெல் விதைகளை கிலோ ஒன்றுக்கு ரூ.20 அல்லது 50சதவீத மானியத்திலும், உளுந்து வம்பன் 5, வம்பன்6, ஆகியவைகளுக்கு விதைகளுக்கு தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம், பயறுவகை திட்டத்தின்கீழ் கிலோவுக்கு ரூ50 அல்லது 50சதவீத மானியத்திலும் வழங்கப்படுகிறது. எண்ணெய் வித்துப்பயிரான நிலக்கடலைக்கு தேசிய எண்ணெய் வித்துக்கள் இயக்க திட்டத்தில் கிலோவுக்கு ரூ.40 அல்லது 50சதவீத மானியமும் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.எனவே விவசாயிகள் சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகி சான்றுபெற்ற தரமான விதைகளைப்பெற்று பயனடையலாம் என வேளாண் துறைஅதிகாரிகள் தெரிவித்தனர்.


Tags : Target ,Karur district ,
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...