×

இளம்பெண் மாயம் தங்கப்பழம் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

புளியங்குடி, அக். 24: வாசுதேவநல்லூர் தங்கப்பழம் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. குழுமங்களின் நிறுவனர் தங்கப்பழம் தலைமை வகித்தார்.  பள்ளி தாளாளர் முருகேசன் முன்னிலை வகித்து மாணவர்களின் ஆராய்ச்சி, அறிவியல் கண்டுபிடிப்புகளை பார்வையிட்டு பாராட்டினார். பள்ளி முதல்வர் டெய்சிராணி, மாணவர்களை ஊக்குவித்து பேசினார்.ஒன்றாம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகள் 200க்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தி இருந்தனர். அறிவியல் கண்காட்சியில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் சான்றிதழ்களும், சிறந்த செயல்முறை மற்றும் செயல்விளக்கம் அளித்த மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.


Tags : Science exhibition ,magic goldfish school ,
× RELATED வத்திராயிருப்பு பள்ளியில் அறிவியல் கண்காட்சி