×

தென்காசியில் புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கம்

தென்காசி, அக். 24: தென்காசியில் ரோட்டரி கிளப் ஆப் குற்றாலம் சக்தி மற்றும் திருவனந்தபுரம் கிம்ஸ் மருத்துவமனை சார்பில் மார்பக புற்றுநோய் கண்டறிதல் மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. தென்காசி டிடி அருணாசலம் அரங்கில் நடந்த முகாமிற்கு மாவட்ட ரோட்டரி திட்ட இயக்குநர் டாக்டர் அப்துல்அஜீஸ் தலைமை வகித்தார். ரோட்டரி ஆளுநர் ஷேக்சலீம் துவக்கி வைத்தார். முகாம் இயக்குநர் டாக்டர் அனுஜா வரவேற்றார். முகாமில் கிம்ஸ் கேன்சர் சென்டர் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சுனில், கேன்சர் குறித்து விளக்கி பேசினார். 35க்கும் மேற்பட்ட பெண்களுக்கு புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை நடந்தது. ரொட்டேரியன் அனிதா தொகுத்து வழங்கினார். சக்தி ரோட்டரி சங்க செயலர் கல்யாணி நன்றி கூறினார். ஏற்பாடுகளை ரோட்டரி தலைவர் சரஸ்வதி மற்றும் அனைத்து உறுப்பினர்கள் ய்திருந்தனர்.


Tags : Tenkasi ,
× RELATED தென்காசி மாவட்டம் கரட்டுமலை சோதனை...