×

ஐன்ஸ்டீன் கல்லூரியில் கருத்தரங்கு

நெல்லை, அக். 24: ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரியில், “ஐன்ஸ்டீன் பெண் மேம்பாட்டாளர்கள்” என்ற தலைப்பில் கல்லூரி பெண் மேம்பாட்டாளர்கள் கருத்தரங்கு நடந்தது. கல்லூரி செயலாளர் எழில்வாணன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக சமூக ஆர்வலர் சன்தியன் திலகவதி பங்கேற்று சிறப்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் வேலாயுதம் முன்னிலை வகித்தார். மாணவி முத்துகார்த்திகா வரவேற்றார். ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவிகளும் தற்போது ஐடி துறையில் பணியாற்றும் செண்பகம், குட்டிசெல்வி, ஞானசங்கரி, லீலா கார்த்திகா, ராதாரமேஷ் ஆகியோர்  வேலைவாய்ப்பு பெறுவதற்கான திட்டமிடல், வேலையில் நெருக்கடிகளை சமாளித்தல் பற்றி எடுத்துரைத்தனர். மாணவி அப்ரீன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறைத்தலைவர் தேவி, கணினிபொறியியல் துறைத்தலைவர் ரேவதி ஆகியோர் செய்திருந்தனர்.

Tags : Seminar ,Einstein College ,
× RELATED ‘என் கல்லூரி கனவு’ உயர்கல்விக்கான...