×

சாயர்புரம் பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் துறை மாணவர் கழகம் துவக்கம்

ஏரல்,  அக். 24:  சாயர்புரம் போப் பொறியியல் கல்லூரி இயந்திரவியல் மற்றும்  அமைப்பியல் துறையில் மாணவர் கழக துவக்க விழா நடந்தது.  மெஸ்சல்ஸ் அன்ட் கண்ஸ்டரா 19  என்ற தலைப்பில் நடந்த இவ்விழாவிற்கு தலைமை வகித்த கல்லூரித் தாளாளர் ராஜேஷ் ரவிசந்தர், மாணவர் கழகத்தை துவக்கிவைத்துப் பேசினார். கல்லூரி முதல்வர் டாக்டர்  ஜாபிந்த் மாணவர் மன்ற கூடுகையின் அவசியத்தை விளக்கினார். வேலூர்  ரினால்ட் மேலாளர் ஏனோக் தாமாஸ், கார்  மற்றும் இயந்திரங்களின் செயலாக்கம் மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்துப்  பேசினார். விழாவில் பேப்பர் பிரசன்டேசன், வினாடி வினா, தொழில்நுட்ப  போட்டிகள் நடத்தப்பட்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.  தூத்துக்குடி கில் அறக்கட்டளையில் உள்ள 30 குழந்தைகளுக்கு மதிய உணவு  வழங்கப்பட்டது. மேலும் கல்லூரி வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டன.  ஏற்பாடுகளை கல்லூரித் தாளாளர் ராஜேஷ் ரவிசந்தர், முதல்வர்  டாக்டர் ஜாபிந்த், துறைத் தலைவர் கணிச்செல்வன் மற்றும் ஜாக்சன்,  ஒருங்கிணைப்பாளர் டென்னிஸ், உதவி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள்  செய்திருந்தனர்.

Tags : Commencement ,Faculty of Mechanics ,Saiyapuram Engineering College ,
× RELATED ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரமோற்சவ...