×

பசும்பொன்னில் 30ம்தேதி குருபூஜை வாகனங்களில் ஒலிபெருக்கி அமைத்து செல்லத் தடை

கோவில்பட்டி, அக். 24:  மருதுபாண்டியர் சகோதரர்களின் 218வது  நினைவு நாள் வரும் 27ம் தேதியும், பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 112வது  குருபூஜை விழா வரும் 30ம் தேதியும் நடைபெறுகிறது. இதையடுத்து இவ்விழாக்களுக்கு செல்லும் அமைப்பாளர்கள், பொறுப்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிய  நிபந்தனைகள் குறித்த ஆலோசனை கூட்டம் கோவில்பட்டியில் நடந்தது. டிஎஸ்பி  ஜெபராஜ் தலைமை வகித்தார். கோவில்பட்டி கிழக்கு, மேற்கு இன்ஸ்பெக்டர்கள் சுதேசன், அய்யப்பன், நாலாட்டின்புதூர் இன்ஸ்பெக்டர்  சுகாதேவி, கழுகுமலை இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, கயத்தாறு இன்ஸ்பெக்டர்  ஆவுடையப்பன், அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் பத்மாவதி, எஸ்ஐகள் அங்குத்தாய், சத்யா மற்றும் போலீசார் பங்கேற்றனர்.      கூட்டத்தில் இவ்விரு விழாக்களுக்கு செல்லும் அமைப்பாளர்கள் யார்? யார்?  அவர்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண்ணை தெரிவிக்க வேண்டும், அமைப்பாளர்கள்  தலைமையில் செல்லும் நபர்களின் எண்ணிக்கையை தெரிவிக்க வேண்டும், வாடகை  வாகனங்களில் செல்லக்கூடாது, சொந்த வாகனங்களில் மட்டும்தான் செல்ல வேண்டும்,     வாகனங்களில் செல்வோர் அவர்களது வாகனங்களின் விவரம் மற்றும் ஆவணங்களின் நகல்களை  சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் சமர்ப்பித்து காவல்துறையினர் தணிக்க செய்தபிறகு வாகன அனுமதி சீட்டு பெற்றபின்னர்தான் செல்ல வேண்டும்,

 டிரைவர்கள் குடிபோதையில் வாகனங்களை ஓட்டி செல்ல கூடாது, மதுபாட்டில்களை  வாகனங்களில் எடுத்துசெல்ல கூடாது, விழாக்கள் தொடர்பாக டிஜிட்டல் பேனர்கள்  வைக்கவோ, வால்போஸ்டர்கள் ஓட்டவோ அனுமதி இல்லை, குருபூஜை தொடர்பாக  சுவர்களில் தலைவர்களின் படம் வரைய அனுமதி இல்லை.  பால்குடம்,  முளைப்பாரி ஊர்வலம் நடத்துவதற்கு காவல்துறை அனுமதித்த வழித்தடத்தில்  மட்டுமே செல்ல வேண்டும். இரவு 10 மணிக்குள் அனைத்து நிகழ்ச்சிகளையும்  முடிக்க வேண்டும்.

 வாகனங்களில் செல்வோர் வாகனத்தின் மேற்கூரையில் அமர்ந்து  செல்ல அனுமதி இல்லை.  வாகனங்களில் ஒலிபெருக்கி அமைத்து செல்ல கூடாது,  எந்தவித கம்பு, ஆயுதங்கள், டீசல், பெட்ரோல் எடுத்துசெல்லக் கூடாது. வாகனங்களில் செல்லும்போது பிற சமுதாயத்தினரின் மனம் புண்படும்படி கோஷங்கள்  எழுப்பக் கூடாது. அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே வாகனங்கள் செல்ல  வேண்டும். திரும்பி வரும்போது அதே வழித்தடங்களில்தான்  வரவேண்டும். குருபூஜைக்கு ஜோதி எடுத்து செல்ல வேண்டும். இருசக்கர வாகனங்களில்  செல்லவும் அனுமதி இல்லை. எந்தவிதமான சாதி,  மோதல் மற்றும் பிரச்னைகள் ஏற்படாமல் சுமூகமாக சென்று சட்டம் ஒழுங்கு  பிரச்னை ஏற்படாதவாறு நடந்து காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. இதில் அகில இந்திய தேவர் இன மக்கள்  கூட்டமைப்பு நிறுவன தலைவர் அண்ணாத்தரை, தேவர் சிலை பொறுப்பாளர்  ஆறுமுகபாண்டி, அகில இந்திய பசும்பொன் முன்னேற்ற கழகத்தின் செண்பகராஜ்,  இனாம்மணியாச்சி முத்துகிருஷ்ணன், துறையூர் முருகன் உள்ளி–்ட்ட பலர்  பங்கேற்றனர்.

Tags : Pasumpon ,Kurupuja ,
× RELATED திருமங்கலத்தில் கோயிலில் மாசி பொங்கல் விழா பெண்கள் முளைப்பாரி ஊர்வலம்