×

கொசு உற்பத்தி குடோனாக மாறிய குன்றத்தூர் பிடிஓ அலுவலகம்


பெரும்புதூர், அக்.24:  குன்றத்தூர் ஒன்றியம் படப்பை ஊராட்சியில் குன்றத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகம் இயங்குகிறது. இந்த அலுவலகம் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இடிந்து விழும் நிலையில் இருந்தது. இதனால் வலுவிழந்த கட்டிடத்தை இடித்துவிட்டு ₹1.49 கோடியில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இதற்கிடையில்,  குன்றத்தூர் ஒன்றியத்தில் உள்ள 42 ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள், பல்வேறு பணிகளுக்காக இந்த அலுவலகம் வந்து செல்கின்றனர்.
இங்கு 2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பாணியில் உள்ளனர். இந்த அலுவலக வளாகத்தில் வட்டார வேளாண் உதவி இயக்குனர் அலுவலகம், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் அலுவலகம், தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகம், அனைவருக்கும் கல்வி இயக்கக அலுவலகம், மாற்றுத் திறனாளிகள் பயிற்சி பள்ளி, வட்டார கல்வி அலுவலகம், இ சேவை மையம் உள்பட பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன.

மேற்கண்ட அலுவலகங்களுக்கு குன்றத்தூர் ஒன்றியத்தில் இருந்து ஏராளமான பொது மக்கள் வந்து செல்கின்றனர். தற்போது குன்றத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகம் முழுவதும் முட்செடிகள் வளர்ந்து, காடுபோல் காட்சியளிக்கிறது. மேலும் கொசு உற்பத்தியாகும் குடோனாகவும் மாறிவிட்டது. இதனால் ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், குன்றத்தூர் ஒன்றியத்தில் உள்ள 42 ஊராட்சிகளில் இருந்து தினமும் ஏராளமான மக்கள் குன்றத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் வந்து செல்கின்றனர். தற்போது மாநிலம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதையொட்டி ஊராட்சி முழுவதும் வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் கொசு ஒழிப்பு நடவடிக்கை எடுக்கபடுகிறது.

ஆனால் படப்பையில் உள்ள குன்றத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில், காடுபோல் வளர்ந்து கிடக்கும் முட்செடிகளால் வளாகம் முழுவதும் கொசு தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அலுவலகம் வந்து செல்ல கடும் அச்சமடைகின்றனர். பொதுமக்கள் மற்றும் ஊழியர்களுக்கு பல்வேறு மர்ம காய்ச்சல், ெதாற்று நோய் ஏற்படும் முன், குன்றத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் வளர்ந்து கிடக்கும் முட்செடிகள் அகற்றி கொசு மருந்து தெளிக்க வேண்டும் என்றனர்.

Tags : office ,Kundathoor PDO ,mosquito production guton ,
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...