×

பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம்


பெரும்புதூர், அக்.24: திருக்கழுக்குன்றம் பேரூராட்சி சார்பில், திருக்கழுக்குன்றம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பேரூராட்சி செயல் அலுவலர் லதா தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை செந்தமிழ் செல்வி, பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் ரவிசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மேலும், டெங்கு காய்ச்சல் குறித்தும், அதை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பெரும்புதூர்: குன்றத்தூர் ஒன்றியம் மணிமங்கலம், மலைப்பட்டு, சேத்துப்பட்டு, படப்பை ஆகிய பகுதியில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல் தடுப்பு நிலவேம்பு கஷாயம் வழங்குதல் மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா நேற்று நடந்தது. அறம் பவுண்டேஷன் காஞ்சிபுரம் மாவட்ட அமைப்பாளர் பூங்காவனம் தலைமை வகித்தார். குன்றத்தூர் ஒன்றிய அமைப்பாளர் பிரபாகரன் வரவேற்றார். இயக்குனர்கள் ஷீலாவதி மணிவண்ணன், வெங்கடேசன், செந்தில்குமார், பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மணிமங்கலம் இன்ஸ்பெக்டர் சவுந்தரராஜன், படப்பை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் அருண்ராஜ், அறம் பவுண்டேஷன் நிறுவனர் சாலமங்கலம் மணிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு அரசு பள்ளி மாணவர்கள் 400 பேருக்கு டெங்கு காய்ச்சல் தடுப்பு நிலவேம்பு கஷாயம் வழங்கினர். மேலும், பள்ளி வளாகத்தில் 50 மரக்கன்றுகள் நடப்பட்டன.

Tags : Earthquake ,school students ,
× RELATED ஆப்கானிஸ்தானில் இன்று பிற்பகல் 1.32 மணிக்கு மிதமான நிலநடுக்கம்