திருத்தணியில் மின்கசிவால் திடீர் தீ விபத்து: பொருட்கள் சேதம்

திருத்தணி, அக். 24:   மின் கசிவால் வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் தொலைக்காட்சி பெட்டி உள்பட வீட்டு உபயோக பொருட்கள் சேதம் அடைந்தது.  திருத்தணி அக்கைய்யா நாயுடு சாலையைச் சேர்ந்தவர் அசேன் பாஷா. இவரது மனைவி நூர்ஷர்ஜகான் (47). இவர் தளம்போட்ட மாடி வீட்டில் வசித்து வருகிறார். நேற்று நண்பகல், வீட்டில் இருந்த டிவி சுவிட்சை ஆன்செய்தபோது, திடீரென மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் வீடு முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. இதை அறிந்ததும் நூர்ஷர்ஜகான் வீட்டிலிருந்து வெளியே ஓடி வந்தார். இதைத்தொடர்ந்து அக்கம், பக்கத்தினர் மற்றும் திருத்தணி தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயை சிறிது நேரத்திலேயே அணைத்தனர். ஆனாலும், தொலைக்காட்சி பெட்டி மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் என பொருட்கள் தீயில் கருகி சேதமானது. இதுகுறித்து திருத்தணி போலீசார் மற்றும் வருவாய் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Tags : Corridor ,
× RELATED ஊத்துக்கோட்டையில் கொரோனா விழிப்புணர்வு பேரணி