×

டெங்கு, ஜப்பானிய காய்ச்சல் மருத்துவ மேலாண்மை பயிலரங்கம்

புதுச்சேரி, அக். 24:    புதுச்சேரி அரசு நலவழித்துறை மற்றும் தேசிய கொசு மற்றும் பூச்சிகளால் பரவும் நோய் தடுப்பு திட்டத்தின் மூலம் புதுவை, மாகே, ஏனாம்  பிராந்தியங்களை சார்ந்த  அரசு, தனியார் மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி  மருத்துவர்களுக்கான டெங்கு  மற்றும் ஜப்பானிய என்செபாலிடிஸ் எனப்படும் மூளையழற்சி காய்ச்சல்களுக்கான மருத்துவ மேலாண்மை பயிலரங்கம் அரசு பொது மருத்துவமனை கருத்தரங்கு கூடத்தில் நேற்று நடந்தது. புதுச்சேரி சுகாதாரத்துறை மற்றும் தேசிய கிராமப்புற சுகாதார இயக்ககத்தின் இயக்குநர் டாக்டர்   மோகன்குமார் தொடங்கி வைத்தார்.  தேசிய கொசு மற்றும் பூச்சிகளால் பரவும் நோய் தடுப்பு திட்டத்தின் மாநில  திட்ட அதிகாரி   டாக்டர் சுந்தர்ராஜ் வரவேற்றார்.  

 சுகாதாரத்துறை இணை இயக்குனர் (பொது சுகாதாரம்) டாக்டர் ரகுநாத் வாழ்த்துரை வழங்கினார்.  நிகழ்ச்சியில் பொது மருத்துவமனை மருத்துவத்துறை டாக்டர்கள் பாபு, பாஸ்கரன், ராஜீவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை, குழந்தைகள் பிரிவு தலைமை மருத்துவ அதிகாரி ராஜீவ் சோனி ஆகியோர் டெங்கு மற்றும் ஜப்பானிய என்செபாலிடிஸ் எனப்படும் மூளையழற்சி காய்ச்சல்களுக்கான மருத்துவ மேலாண்மை  தொடர்பாகவும்,  உலக சுகாதார நிறுவனத்தால் இந்த காய்ச்சல்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட நவீன சிகிச்சை முறைகள் குறித்தும், அதற்கான விளக்கங்களையும், இக்காய்ச்சலால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்க வேண்டிய மருத்துவ முறைகளையும் எடுத்துரைத்தனர். இதில் புதுச்சேரி, மாகே மற்றும் ஏனாம் ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஜிப்மர் மருத்துவமனை, இஎஸ்ஐ மருத்துவமனை,  சித்த மருத்துவமனை மற்றும்  தனியார் மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவ அதிகாரிகள் கலந்து கொண்டனர். மலேரியா உதவி  இயக்குனர்  டாக்டர் கணேசன்  நன்றி கூறினார். ஏற்பாடுகளை தேசிய கொசு மற்றும் பூச்சிகளால் பரவும் நோய் தடுப்பு துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.

Tags : Japanese ,influenza medical management workshop ,
× RELATED பழநி கோயிலில் ஜப்பான் பக்தர்கள் தரிசனம்