டெங்கு விழிப்புணர்வு பேரணி

கள்ளக்குறிச்சி, அக். 24:     கள்ளக்குறிச்சி அடுத்த வாணவரெட்டி அரசு உயர்நிலை பள்ளி மாணவர்கள் பங்கேற்ற டெங்கு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர்  சுப்ரமணியன் தலைமை தாங்கி பேரணியை துவக்கி வைத்தார். பள்ளி  ஆசிரியர்கள் ஜெகதீசன், சிங்காரவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியில்  துவங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்றது. டெங்கு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையி  ஏந்தியபடி மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர். இதில்  ஆசிரியர்கள் குறிஞ்சி, அமுதம், ஜீவா, பொன்முடி, பயிற்சி ஆசிரியர்கள்  கண்ணன், சங்கீதா, கலையரசி, ஆய்வக உதவியாளர் பழனிவேல் மற்றும் பள்ளி மாணவ,  மாணவிகள் கலந்து கொண்டனர். ஆசிரியர் ஏழுமலை  நன்றி கூறினார்.

Related Stories:

>