×

விக்கிரவாண்டி தொகுதியில் இன்று வாக்கு எண்ணிக்கை

விழுப்புரம், அக். 24: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகிறது.
தமிழகத்தில்  காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்கான  இடைத்தேர்தல் கடந்த 21ம் தேதி நடந்தது. விக்கிரவாண்டி தொகுதியில் புகழேந்தி  (திமுக), முத்தமிழ்ச்செல்வன் (அதிமுக), திரைப்பட இயக்குநர் கவுதமன்  உள்ளிட்ட 12 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வாக்கு பதிவிற்காக  விக்கிரவாண்டியில் 275 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது.  மொத்தமுள்ள வாக்காளர்கள் 2,23,387 பேரில் 93,633 ஆண் வாக்காளர்களும், 95,022  பெண் வாக்காளர்களும், 4 திருநங்கைகள் என மொத்தம் 1,88,659 பேர்  வாக்களித்தனர். 84.41 சதவீத வாக்குகள் பதிவானது.வாக்குப்பதிவு  முடிவடைந்த நிலையில் வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு  இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு விழுப்புரம் அய்யூர்அகரத்தில் உள்ள  தனியார் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும்  மையத்திற்கு கொண்டுவரப்பட்டது. நேற்றுமுன்தினம் காலை ஸ்டாரங் ரூமிற்கு ஆட்சியர்  சுப்ரமணியன், தேர்தல் பொது பார்வையாளர் சீனுவீரபத்ருடு மற்றும்  வேட்பாளர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டன.

இன்று (24ம் தேதி)  வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இதையொட்டி தேர்தல்  ஆணையத்தின் அறிவுரைப்படி 14 ேமசைகள் போடப்பட்டுள்ளது. அனைத்து மேசைகளிலும்  வாக்கு எண்ணும் மேற்பார்வையாளர், வாக்கு எண்ணும் உதவியாளர், ஒவ்வொரு  மேசைக்கும் மைக்ரோ அப்சர்வர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு  மேசையிலும் நடைபெறும் வாக்கு எண்ணிக்கையை சிசிவிடி கேமரா மூலம் கண்காணிக்க  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வாக்குகள் 22 சுற்றுகளாக எண்ணப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கும்  நிலையில், காலை 10 மணியளவில் வெற்றிவாய்ப்பு தெரியவரும் என கூறப்படுகிறது.  வாக்கு எண்ணும் மையத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு  போடப்பட்டுள்ளது.


Tags : voters ,electorate ,
× RELATED சட்டமன்ற உறுப்பினர்கள்...