×

போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திட்டக்குடி, அக். 24: விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக (கடலூர் மண்டலம்) திட்டக்குடி பணிமனையில் நேற்று அதிகாலை போக்குவரத்து ஊழியர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். தெலங்கானாவில் போக்குவரத்துதுறை தொழிலாளர்கள் 45 ஆயிரம் பேர் பணி நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்தும், இதில் மரணமடைந்த 9 தொழிலாளர்களை நினைவுகூறும் வகையிலும் மெழுகுவத்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். மேலும் பண்டிகை முன்பணம் மற்றும் தீபாவளி போனஸ் கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர் மணிகண்டன் தலைமை தாங்கினார். இதில் ஓட்டுனர்கள், நடத்துனர்கள் மற்றும் பணிமனை ஊழியர்கள் கலந்துகொண்டனர். தகவல் அறிந்ததும் திட்டக்குடி போலீசார் விரைந்து சென்று போக்குவரத்து ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர்.கடலூர்: கடலூரில் உள்ள மண்டல போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகம் முன்பு தொமுச மண்டல தலைவர் பழனிவேலு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சிஐடியூ பாஸ்கர், எம்எல்எப் மணிமாறன், ஏஎல்எல்எப் கருணாநிதி, ஐஎன்டியுசி சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொழிற்சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். இதேபோல் விருத்தாசலம், சிதம்பரம், வடலூர் ஆகிய போக்குவரத்து கழக பணிமனை முன்பும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


Tags : Transport staff ,
× RELATED நடத்துனர் இல்லா பேருந்துகளை...