×

பொழிச்சலூரில் காவல் துறை அமைத்த சிசிடிவி கேமரா உடைப்பு : வாலிபர் கைது; 4 பேருக்கு வலை

பல்லாவரம்: பொழிச்சலூரில் காவல் துறை சார்பில் அமைத்த சிசிடிவி கேமராவை உடைத்து சேதப்படுத்திய வாலிபரை நேற்று சங்கர் நகர் போலீசார் கைது செய்தனர்.  பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர், மேட்டுத்தெருவில் குற்றம் நடக்காமல் தடுக்கும் வகையில் சங்கர் நகர் காவல் நிலையம் சார்பில் 3 சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் நேற்று அதில் ஒரு கேமரா பதிவுகள் எதுவும் பதிவாகாததால், சந்தேகமடைந்த போலீசார் நேரில் சென்று பார்த்தனர். அப்போது, அந்த கேமரா மர்ம நபர்களால் உடைக்கப்பட்டு, அருகில் உள்ள கிணற்றில் வீசி சென்றது தெரியவந்தது. விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த மாதவன் (22) உள்பட 5 பேர்  கும்பல் சிசிடிவி கேமராக்களை உடைத்து சேதப்படுத்தியது தெரிய வந்தது.

அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த பகுதியில் விசாரணையில், தினமும் இரவு அந்தப் பகுதியில் நண்பர்களுடன் அமர்ந்து மது அருந்துவதாகவும், பொது இடத்தில் வைத்து மது அருந்துவதை சிசிடிவி கேமரா மூலம் போலீசார் கண்காணிக்கக் கூடும் என்ற காரணத்தால் உடைத்து சேதப்படுத்தியதாக கூறினார். இந்த வழக்கில்  மேலும் தலைமறைவாக உள்ள மாதவனின் நண்பர்கள் 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். நாளுக்கு நாள் குற்றச் சம்பவம் அதிகரித்து வரும் வேளையில், குற்றவாளிகளை  அடையாளம் கண்டு, போலீசார் அவர்களை பிடிப்பதில் சிசிடிவி கேமராக்கள் பெரும் பங்கு வகித்து வருகின்றன. அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த சிசிடிவி கேமராக்களை பகுதி இளைஞர்களே உடைத்து சேதப்படுத்திய சம்பவம் பொழிச்சலூர் பகுதி மக்களை அதிருதியடைய செய்துள்ளது.

Tags : Paichchaloor: Youth ,
× RELATED பொழிச்சலூரில் காவல் துறை அமைத்த...