×

வேளச்சேரி பகுதியில் சுற்றித்திரிந்த மனநலம் பாதித்த சிறுவன் காப்பகத்தில் ஒப்படைப்பு

வேளச்சேரி:  வேளச்சேரி பகுதி யில் சுற்றித்திரிந்த மன நலம் பாதித்த சிறு வனை போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத் தனர். வேளச்சேரி பகுதியில் 16 வயது மதிப்பிலான மனநிலை பாதிக்கப்பட்ட சிறுவன் சுற்றித்திரிவதாக வேளச்சேரி காவல் நிலையத்திற்கு நேற்று முன்தினம் மாலை பொதுமக்கள் சிலர் தகவல் கொடுத்தனர். இதையடுத்து வேளச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜிவ் பிரின்ஸ் ஆரோன் உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி மற்றும் காவலர்கள் அங்கு சென்று சிறுவனை தேடினர்.

அப்போது மருதுபாண்டி தெருவில் சிறுவன் நின்று கொண்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து சிறுவனை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து குளிப்பாட்டி, புதுத்துணி அணிவித்தனர். மேலும் சிறுவனுக்கு உணவு வழங்கினர்.
அந்த சிறுவன் தனது பெயர், சொந்த ஊர் குறித்து எதையும் சொல்ல முடியாத மனநிலையிலும், வாய் பேசமுடியாத நிலையிலும் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அமைந்தகரையில் உள்ள கருணை இல்ல காப்பகத்துக்கு தகவல் தெரிவித்தனர். காப்பக உரிமையாளர்கள் வேளச்சேரி காவல் நிலையத்திற்கு வந்து மனநிலை பாதித்த சிறுவனை மீட்டு தங்களது காப்பகத்துக்கு அழைத்துச்சென்றனர்.

Tags : Velachery ,
× RELATED சென்னை வேளச்சேரியில் பட்டா கத்தியால்...