×

அலமாதி பழைய விமான நிலையத்தில் வாலிபரை வெட்டி 14 ஆயிரம் பறிப்பு: 3 பேருக்கு வலை

புழல்: செங்குன்றம் அடுத்த நல்லூர் ஊராட்சிக்குட்பட்ட அன்னை இந்திரா நகர் பகுதியை சேர்ந்த இடிமன்னன் (46) என்பவர் உள்பட 4 பேர் கும்பல் செங்குன்றம் அடுத்த அலமாதி பழைய விமான நிலையத்திற்கு சொந்தமான இடத்தில் நேற்று முன்தினம் இரவு மது அருந்திக்கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த நாகாத்தம்மன் நகரை சேர்ந்த மணி (எ) மணிகண்டன் (28) என்பவர் உள்ளிட்ட 3 பேர் சேர்ந்து இடிமன்னனை மிரட்டி பணம் கேட்டனர். அவர் பணம் கொடுக்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தலையில் வெட்டிவிட்டு பாக்கெட்டில் இருந்த ₹14 ஆயிரம், ஒரு செல்போன் ஆகியவற்றை பறித்து சென்றுவிட்டனர். இதில் படுகாயம் அடைந்த இடிமன்னன் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தகவல் அறிந்த சோழவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டன் மற்றும் 2பேரை தேடி வருகின்றனர்.

Tags : airport ,
× RELATED தூத்துக்குடி விமான நிலையம் நாளை மூடல்