×

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

சேலம், அக். 24: தமிழ்நாடு திறன்மேம்பாட்டு கழகமும், சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் இணைந்து நாளை (25ம் தேதி) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கோரிமேட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இம்முகாமில் அக்கவுண்டன்ட், கணினி ஆப்ரேட்டர், டெக்ஸ்டைல்  சூபர்வைசர், மார்க்கெட்டிங் ஆபீசர், டைலர் போன்ற பணியிடங்களுக்கு வேலை  வாய்ப்பு முகாம் நடைபெறகிறது. வேலைக்கு ஆட்கள் தேவைப்படும் தனியார் நிறுவனங்கள், இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களுக்கு தேவைப்படும் பணியாளர்களை தேர்வு செய்து கொள்ளலாம். இதே போல் வேலைவாய்ப்பை தேடுபவர்களும் இதனை பயன்படுத்தி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Private Sector Employment Camp ,
× RELATED சென்னையில் மாபெரும் தனியார் துறை...