×

திருச்செங்கோட்டில் சாக்கடை கால்வாயை மூட வலியுறுத்தல்

திருச்செங்கோடு, அக்.24: திருச்செங்கோடு புதிய பஸ் நிலையம் அருகில், சாலையோரம் கடைகளுக்கு முன் புதிதாக சாக்கடை  கட்டியவர்கள், சிலாப் போட்டு மூடாததால் ஆபத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது.திருச்செங்கோடு புதிய பஸ் நிலையம் ரவுண்டானா அருகே, கிழக்குப்புற சாலையில் ஓட்டல்கள், டீ கடைகள், பேக்கரி மற்றும் ஸ்டேஷனரி கடைகள் உள்ளன. இந்த கடைகளின் முன்புறம் 10 அடி ஆழத்துக்கு புதிதாக க்கடை பாலம் கட்ட நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக பள்ளம் தோண்டியவர்கள், சாக்கடை கால்வாய் கட்டினர். பணிகள் முடிந்து பல மாதங்களாகியும், பள்ளத்தை மூடாமல் அப்படியே விட்டுள்ளனர். மேலும், கால்வாயின் மேல் பகுதியில் சிலாப் கல் போடவில்லை. திறந்த நிலையில் பெரிய கால்வாய் உள்ளதால் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் மற்றும் முதியவர்கள் கடைகளுக்குள் செல்ல சிரமப்படுகின்றனர்.

கடைக்காரர்கள் சாக்கடை கால்வாயின் மீது வைத்துள்ள மரப்பலகையை அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். தற்போது மழைக்காலம் என்பதால் மழைநீர் சாக்கடையில் நிரம்பி ஓடுகிறது. அந்த சமயங்களில் சாக்கடை கால்வாய் எது, சாலை எது என்பது தெரியாத நிலை உள்ளது. பலர்  சாக்கடை கால்வாயில் தவறி விழுந்துள்ளனர். சிலரது வாகனங்களும் சாக்கடை கால்வாய் அருகில் உள்ள பள்ளத்தில் விழுந்துள்ளன. பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படும் முன்பாக, சாக்கடை கால்வாயை சிலாப் போட்டு மூடவும், அருகில் உள்ள பள்ளத்தை மண்கொட்டி சமன்படுத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : closure ,Tiruchengode ,
× RELATED லாரியில் கொண்டு வந்த ₹1.13 லட்சம் பறிமுதல்