×

பொட்டிரெட்டிப்பட்டியில் சிறப்பு மருத்துவ முகாம்

சேந்தமங்கலம், அக்.24: எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம் பொட்டிரெட்டிப்பட்டி ஊராட்சியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத் துறை சார்பில், சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. இந்த முகாமிற்கு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சசிகுமார் தலைமை தாங்கினார்.  மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஞானசுந்தரி , வட்டார சுகாதார ஆய்வாளர் பாலமுரளி முன்னிலை வகித்தனர்.  முகாமில் மருத்துவ குழுவினர், பொதுமக்களுக்கு சிறப்பு பரிசோதனை செய்து மருந்து மாத்திரைகள் மற்றும் அறிவுரைகளை வழங்கினர். தொடர்ந்த பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கினர்.  ஊராட்சி முழுவதும் உள்ள குடிநீர் தொட்டிகளில் குளோரின் மருந்து போடப்பட்டது.  சாக்கடை கால்வாய் மற்றும் தெருக்களில் பள்ளத்தில் தோங்கியுள்ள மழைநீரில் கொசு மருந்து அடிக்கப்பட்டது.  முகாமில் சுகாதார ஆய்வாளர்கள் சுப்ரமணி , யுவராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Specialty Medical Camp ,
× RELATED இலவச ஹோமியோபதி சிறப்பு மருத்துவ முகாம்