ஓசூரில் தீயணைப்பு துறை சார்பில் பாதுகாப்பாக தீபாவளி கொண்டாட விழிப்புணர்வு

ஓசூர், அக்.24: ஓசூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.விழிப்புணர்வு நிகழ்ச்சியில், தீக்காயங்கள் ஏற்படாதவாறு பட்டாசுகள் வெடிப்பது குறித்த செயல் விளக்கங்களை ஓசூர் தீயணைப்பு வீரர்கள் மாணவர்களிடம் செயல்விளக்கம் காண்பித்தனர்.இதில், ராக்கெட் உள்ளிட்டவை பட்டாசுகளை குடிசை பகுதிகளில் தவிர்த்து, பெற்றோர் முன்னிலையில் பட்டாசுக: வெடிக்க வேண்டும். எதிர்பாராமல் தீவிபத்து ஏற்பட்டால், தண்ணீர் ஊற்றி அணைக்க வேண்டும், பட்டாசுக்களை பாக்கெட்டுகளில் வைக்க கூடாது, சமையலறையில் பட்டாசுகள் வைப்பதை தவிர்க்க வேண்டும், வெடிக்காத பட்டாசுக்களை கையில் எடுப்பதை தவிர்க்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் ஓசூர் தீயணைப்பு துறை அதிகாரிகள், மாணவர்கள், ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>